நிலத்தகராறில் தொழிலாளியை தாக்கியவர் கைது

நிலத்தகராறில் தொழிலாளியை தாக்கியவர் கைது
Published on

ஊத்தங்கரை:

ஊத்தங்கரை தாலுகா மூங்கிலேரியை சேர்ந்தவர் ராமச்சந்திரன் (வயது 52). கூலித்தொழிலாளி. அதே பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (33). உறவினர்கள். இவர்களுக்குள் நிலத்தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் ஏற்பட்ட பிரச்சினையில் ராமச்சந்திரனை, கோவிந்தராஜ் கை மற்றும் செங்கல்லால் தாக்கினார். இதில் காயமடைந்த ராமச்சந்திரன் சிகிச்சைக்காக ஊத்தங்கரை அரசு ஆஸ்பத்தரியில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து அவர் கொடுத்த புகாரின்பேரில் ஊத்தங்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து கோவிந்தராஜை கைது செய்தனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com