தனியார் நிறுவன ஊழியரிடம் பணம் பறித்த 2 பேர் கைது

தனியார் நிறுவன ஊழியரிடம் பணம் பறித்த 2 பேர் கைது
Published on

ஓசூர்:

ஓசூர் சின்ன எலசகிரி காமராஜ் நகரை சேர்ந்தவர் ஷகிபுல் இஸ்லாம் (வயது 23). தனியார் நிறுவன ஊழியர். இவர் பேடரப்பள்ளி ஆஞ்சநேயர் கோவில் அருகில் நின்றிருந்தார். அப்போது அங்கு வந்த 2 பேர் கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் பணத்தை பறித்தனர். இதுகுறித்து ஷகிபுல் இஸ்லாம் சிப்காட் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தியதில் பணத்தை பறித்தவர்கள் ஓசூர் சிப்காட் பேடரப்பள்ளி பாரதியார் நகரை சேர்ந்த சரவணன் (25) மற்றும் விக்னேஷ் (20) என்பது தெரியவந்தது. அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com