நிலத்தகராறில் முன்னாள் ராணுவ வீரர் உள்பட 3 பேர் கைது

நிலத்தகராறில் முன்னாள் ராணுவ வீரர் உள்பட 3 பேர் கைது
Published on

காவேரிப்பட்டணம்:

காவேரிப்பட்டணம் அருகே உள்ள பன்னிஅள்ளி புதூரை சேர்ந்தவர் சுதந்திரம் (வயது 40). முன்னாள் ராணுவ வீரர். இவருடைய அண்ணன் மணி (49). இவர்களுக்குள் நிலப்பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சம்பவத்தன்று ஏற்பட்ட பிரச்சினையில் சுதந்திரம் தாக்கப்பட்டார். இதுகுறித்து அவர் கொடுத்த புகாரின்பேரில் காவேரிப்பட்டணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மணி (49), அவருடைய மகன் கோவிந்தன் (24) ஆகிய 2 பேரை கைது செய்தனர். அதேபோல் மணி கொடுத்த புகாரின் பேரில் சுதந்திரத்தை போலீசார் கைது செய்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com