பணம் வைத்து சூதாடிய 9 பேர் கைது

பணம் வைத்து சூதாடிய 9 பேர் கைது
Published on

பாப்பிரெட்டிப்பட்டி:

பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள எச்.புதுப்பட்டியில் பணம் வைத்து சூதாட்டம் நடைபெறுவதாக ஏ.பள்ளிப்பட்டி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மதியழகன் மற்றும் போலீசார் எச்.புதுப்பட்டி பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்குள்ள அரசு தொடக்கப்பள்ளி அருகே உள்ள புளியமரத்தின் அடியில் பணம் வைத்து சூதாடிய கதிரவன் (வயது 25), விஜய் (25), தம்பிதுரை (39), மணி (27), சபரி (19), கார்த்திக் (23), சரவணன் (24), மணிராஜன் (30), கார்த்திக் (29) ஆகிய 9 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 3 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் ரூ.1,820 ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.

X

Daily Thanthi
www.dailythanthi.com