பொது இடத்தில் ஆபாசமாக பேசிய 3 பேர் கைது

பொது இடத்தில் ஆபாசமாக பேசிய 3 பேர் கைது
Published on

ஓசூர் டவுன் போலீசார் காரப்பள்ளி பஸ் நிறுத்தம் அருகே ரோந்து சென்றனர். அப்போது அங்கு பொதுமக்கள், போக்குவரத்துக்கு இடையூறு செய்யும் வகையில் ஆபாசமாக பேசி கொண்டிருந்த நபரை பிடித்து விசாரணை நடத்தினர். அதில் அவர்கள் ஓசூர் ஒன்னால்வாடி ஓ.காரப்பள்ளி பகுதியை சேர்ந்த நாகராஜ் (வயது 49) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.

இதேபோல் பர்கூர் மற்றும் போச்சம்பள்ளி பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறு செய்தும், ஆபாசமாக பேசிய வேலூர் மாவட்டம் குள்ளிபாளையம் பகுதியை சேர்ந்த அந்திரியா (52), விருப்பாச்சிபுரம் பகுதியை சேர்ந்த ஜெயவேல் (36) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com