பணம் வைத்து சூதாடிய 2 பேர் கைது

பணம் வைத்து சூதாடிய 2 பேர் கைது
Published on

பென்னாகரம்:

பென்னாகரம் அருகே உள்ள மேற்கு கள்ளிப்புரம் முனியப்பன் கோவில் அருகே பணம் வைத்து சூதாடுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அப்பகுதிக்கு சென்று சூதாடி கொண்டிருந்த 4 பேரை சுற்றி வளைத்தனர். அதில் கள்ளிபுரத்தை சேர்ந்த முனுசாமி (வயது 48), மகேந்திரன் (57) ஆகியோர் பிடிபட்டனர். இதையடுத்து அவர்கள் இருவரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 52 சீட்டு கட்டுகள் மற்றும் ரூ.170 ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் தலைமறைவான கர்ணன் (40), சரவணன் (32) ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com