அன்பில் மகேஷ் கைது: அண்ணாமலை வரவேற்பு

திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் நேற்று கைது செய்யப்பட்டார்.
அன்பில் மகேஷ் கைது: அண்ணாமலை வரவேற்பு
Published on: 

சென்னை,

வீ த லீடர்ஸ் அமைப்பின் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் கூறப்பட்டிருப்பதாவது:-

கைது

பள்ளிக் கல்வித்துறை தொடர்பான முறைகேடு குற்றச்சாட்டின் அடிப்படையில், முன்னாள் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கைது செய்யப்பட்டுள்ள நடவடிக்கையை வரவேற்கிறோம். தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை.

கடந்த 2023-ம் ஆண்டு, நாங்கள் திமுக பைல்ஸ் வெளியிட்டபோது, தமிழ்நாட்டில் நோபல் ஸ்டீல் நிறுவனத்தின் ரூ.1,000 கோடி முதலீடு தொடர்பாக நாம் எழுப்பிய கேள்விகளுக்கு அன்றைய திமுக அரசு உரிய விளக்கம் அளிக்கவில்லை. அந்த முதலீடும் தமிழகத்துக்கு வரவில்லை, முறைகேடான முதலீடு என்ற எங்கள் குற்றச்சாட்டுக்கும் இன்றுவரை பதில் இல்லை.

ரூ.1,000 கோடி முதலீடு

அன்பில் மகேஷ் தொடர்பான உதயநிதி ஸ்டாலின் பெயரிலான அறக்கட்டளை, நோபல் குழுமத்தின் மற்றொரு நிறுவனமான நோபல் பிரிக்ஸ் நிறுவனம் இயங்கி வந்த அதே முகவரியில் இயங்கி வந்ததாகக் கூறப்பட்ட தகவலுக்கும் இன்று வரை பதில் இல்லை. நோபல் பிரிக்ஸ் நிறுவனத்திற்கும் உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளைக்கும் இடையே என்ன தொடர்பு? அந்த நிறுவனத்தின் ரூ.1,000 கோடி முதலீடு தொடர்பான கேள்விகளுக்கு என்ன பதில்?.

இந்த விவகாரத்திலும் தவெக அரசு வெளிப்படையான விசாரணை நடத்தி, உண்மைகளை மக்களுக்குத் தெரிவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com