சங்கமம் கலைத் திருவிழாவில் பங்கேற்க கலைக்குழுக்கள் விண்ணப்பிக்கலாம் - தமிழக அரசு

சங்கமம் - நம்ம ஊரு திருவிழா இந்த ஆண்டு தமிழ்நாட்டின் முக்கிய 8 நகரங்களில் நடத்தப்படுகிறது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

சென்னை,

சென்னை சங்கமம் மற்றும் தமிழ்நாட்டில் முக்கிய நகரங்களில் நடைபெற உள்ள சங்கமம் கலைத் திருவிழாவில் பங்கேற்க கலைக்குழுக்கள் விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசின் கலை பண்பாட்டுத்துறை இயக்குநர் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-

Also Read
இளைஞர்களே தாய்த்தமிழைக் காக்க உழைப்பை மட்டும் கொடுங்கள் போதும்; உயிரை அல்ல! - மு.க.ஸ்டாலின்
கோப்புப்படம்

தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத்துறை சார்பில் சென்னையில், பொங்கல் விழாவின்போது தமிழ்நாட்டின் நாட்டுப்புறக் கலைகள், அயல் மாநில நாட்டுப்புறக் கலைகள், செவ்வியல் கலைகள் இடம் பெறும் வகையில் சென்னை சங்கமம் - நம்ம ஊரு திருவிழா சென்னையில் 20 இடங்களில் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு காஞ்சிபுரம், சேலம், கோயம்புத்தூர், மதுரை, தஞ்சாவூர், திருச்சி மற்றும் திருநெல்வேலி ஆகிய எட்டு இடங்களில் சங்கமம் - நம்ம ஊரு திருவிழா நடத்தப்பட்டது. இவ்வாண்டில் தமிழ்நாட்டின் முக்கிய 8 நகரங்களில் இவ்விழா நடத்தப்படும்.

Also Read
டிஜிட்டல் கைது: ஓய்வுபெற்ற ஆசிரியையிடம் ரூ.10 லட்சம் மோசடி - சைபர் கிரைம் போலீசார் விசாரணை
கோப்புப்படம்

இவ்விழாக்களில் பங்கேற்க விரும்பும் கலைக்குழுக்கள் கலை பண்பாட்டுத்துறையின் இணையதளத்தில் (www.artandculture.tn.gov.in) வெளியிடப்பட்டுள்ள விண்ணப்பத்தினை நிரப்பி தங்கள் பகுதிக்கான கலை பண்பாட்டுத்துறையின் மண்டல அலுவலகங்களுக்கு மார்ச் 31-ம் தேதி மாலைக்குள் விண்ணப்பிக்கலாம்.

Also Read
தமிழக நீர்நிலைகளை தூர்வார ரூ.125 கோடி மட்டும் ஒதுக்கி இருப்பது ஏமாற்றும் செயல் - ராமதாஸ்
கோப்புப்படம்

கலைக்குழுக்களின் 5 நிமிட வீடியோ பதிவு செய்யப்பட்டு கலை பண்பாட்டுத்துறையால் அமைக்கப்படும் தேர்வுக் குழுவால் தமிழ்நாட்டில் நடைபெற உள்ள சங்கமம் திருவிழாவில் நிகழ்ச்சி வழங்குவதற்கான கலைக்குழுக்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இவ்விழாக்களில் சிறப்பான நிகழ்ச்சி வழங்கிய கலைக்குழுவினர் மாநில அளவிலான தேர்வுக்குழுவால் தெரிவு செய்யப்பட்டு 2027-ம் ஆண்டு சென்னை சங்கமம் விழாவில் வாய்ப்பு பெறுவார்கள்.

கலை பண்பாட்டுத்துறை அளித்துள்ள இந்த வாய்ப்பினை அனைத்து நிகழ்த்துக்கலை கலைஞர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com