

சென்னை,
சென்னை ஐஐடியில் நடைபெறும் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, 13 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு வளர்ச்சி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.
குறிப்பாக, 3 ஆயிரத்து 700 கோடி ரூபாய் மதிப்பிலான தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். சுமார் 750 கோடி ரூபாய் மதிப்பிலான ரெயில்வே திட்டங்களை தொடங்கி வைக்கும் பிரதமர் மோடி, புனரமைக்கப்பட்ட 5 ரெயில் நிலையங்களை திறந்து வைக்கிறார். இதற்கான விழா தொடங்கி நடைபெற்று வருகிறது.
முதலில் நாட்டுப்பண் பாடப்பட்டநிலையில், அடுத்ததாக தமிழ் தாய் வாழ்த்து பாடப்பட்டது. விழா மேடையில் பிரதமர் மற்றும் முதல்-அமைச்சருடன் மத்திய இணை மந்திரி எல்.முருகன் மற்றும் அமைச்சர் என்.ஆனந்த் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.
இந்நிலையில் பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் வலைதள பதிவில் கூறியிருப்பதாவது:-
இன்றைய தினம், பல்வேறு மக்கள் நலத்திட்டங்களைத் தொடங்கி வைப்பதற்காகத் தமிழகம் வருகை தந்த பாரதப் பிரதமர் பிரதமர் மோடிஜி அவர்களைச் சென்னை விமான நிலையத்தில் வரவேற்பதற்காக வருகை தந்திருந்த தமிழக முதல்-அமைச்சர் சி. ஜோசப் விஜய் அவர்களை மத்திய இணை மந்திரி எல்.முருகன் அவர்களுடன் இணைந்து மரியாதை நிமித்தமாக சந்தித்து உரையாடினோம்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.