குறி சொல்வது போல் வீட்டிற்கு சென்று மூதாட்டியிடம் 3 பவுன் செயின் பறிப்பு

மூதாட்டியிடம் 3 பவுன் தங்கச்சங்கிலி பறித்த நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
குறி சொல்வது போல் வீட்டிற்கு சென்று மூதாட்டியிடம் 3 பவுன் செயின் பறிப்பு
Published on

ராமநாதபுரம்,

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் பகுதியை சேர்ந்தவர் தனிக்கொடி. முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர். இவருடைய மனைவி பாப்பா (வயது 70). சம்பவத் தன்று இவர் வீட்டில் இருந்தார். அப்போது மோட்டார்சைக்கிளில் வந்த நபர் குறிசெல்வதை போல் நடித்து பாப்பாவின் வீட்டுக்கு சென்றார். பின்னர் அவர் பாப்பாவிடம், உங்கள் வீட்டில் செய்வினை கோளாறு உள்ளது என்றும், அதற்கு பரிகாரம் செய்ய தண்ணீர் எடுத்து வாருங்கள் என்றும் கூறியுள்ளார்.

அதன்படி அவரும் வீட்டிற்குள் சென்று தண்ணீர் எடுத்து வந்தார். அப்போது அந்நபர் பாப்பாவிடம் தங்களுடைய கழுத்தில் கிடக்கும் தங்கச்சங்கி லியை கழட்டி செம்பில் உள்ள தண்ணீரில் போடும்படி கூறியுள்ளார். அதன் பேரில் பாப்பாவும் தான் அணிந்திருந்த 3 பவுன் தங்கச்சங்கிலியை கழட்டி செம்புக்குள் போட்டுள்ளார்.

சிறிது நேரத்தில் அந்த நபர் பாப்பாவை தள்ளிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். இதுகுறித்து அவர் கீழத்தூவல் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பாப்பாவிடம் நகையை பறித்த நபர் மோட்டார்சைக்கிளில் தப்பச்சென்ற காட்சி அப்பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. அதனை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com