சட்டசபை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு

பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்காக அடுத்த மாதம் (ஜூலை) தமிழக சட்டசபை மீண்டும் கூட இருக்கிறது.
சட்டசபை ஒத்திவைப்பு
Published on

சென்னை,

தமிழகத்தில் புதிதாக ஆட்சி பொறுப்பேற்றுள்ள த.வெ.க. அரசின் முதல் சட்டசபை கூட்டம் கடந்த 18-ந் தேதி கவர்னர் உரையுடன் தொடங்கியது. தொடர்ந்து, 19 மற்றும் 22-ந் தேதிகளில், கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடைபெற்றது.

இந்த விவாதத்தில் பங்கேற்று பேசிய ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதில் அளித்தார்கள். நிறைவு நாளான இன்று, முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் பதிலுரை வழங்கி பேசினார்.

அதனைத் தொடர்ந்து, தமிழக சட்டசபை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுவதாக சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் அறிவித்தார். அடுத்து, 2026-27-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்காக அடுத்த மாதம் (ஜூலை) தமிழக சட்டசபை மீண்டும் கூட இருக்கிறது. தொடர்ந்து, துறை வாரியாக மானியக் கோரிக்கை விவாதமும் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தொடர் ஒரு மாதத்திற்கும் மேலாக நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com