சட்டசபை தேர்தல்: ஏப்ரல் 23-ம்தேதி தமிழகத்தில் பொது விடுமுறை அறிவிப்பு

தமிழக சட்டசபைக்கான தேர்தல் ஏப்ரல் 23-ந்தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

சென்னை,

234 தொகுதிகளை கொண்ட தமிழக சட்டசபைக்கான தேர்தல் அடுத்த மாதம் (ஏப்ரல்) 23-ந்தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது. அதற்கான வேட்புமனு தாக்கல் செய்ய வருகிற 30-ந்தேதி முதல் ஏப்ரல் 6-ந்தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை மே 4-ம் தேதி நடைபெற்று, அதே நாளில் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

தேர்தலை முன்னிட்டு அனைத்து கட்சிகளும், வேட்பாளர் தேர்வு, நட்சத்திர பேச்சாளர்கள் தேர்வு உள்ளிட்ட தீவிர அரசியல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. தேர்தலை முன்னிட்டு தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளன.

இந்த நிலையில் தமிழ்நாட்டில் சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறும் ஏப்ரல் 23-ம்தேதி பொது விடுமுறை தினமாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இதற்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசு அரசாணையாக வெளியிட்டுள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com