சட்டமன்ற தேர்தல்: காங்கிரஸ் - பாமக நேரடியாக மோதும் தொகுதிகள் எவை?

காங்கிரஸ் கட்சி 27 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்துள்ளது.
சட்டமன்ற தேர்தல்: காங்கிரஸ் - பாமக நேரடியாக மோதும் தொகுதிகள் எவை?
Published on

சென்னை,

தமிழக சட்டமன்ற தேர்தல் வருகிற 23-ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 4-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இந்த தேர்தலில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, தமிழக வெற்றிக் கழகம், நாம் தமிழர் கட்சி என 4 முனை போட்டி நிலவுகிறது.

திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 28 தொகுதிகளும், அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் காங்கிரஸ் கட்சி மதுரை மேலூர் தவிர மற்ற 27 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்துள்ளது.

வருகிற சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் - பாமக 3 தொகுதிகளில் நேரடியாக மோதுகின்றன. அதன்படி,

  • பென்னாகரம் தொகுதியில் பாமக சார்பில் செல்வமும், காங்கிரஸ் சார்பில் தமிழ்குமரனும் போட்டியிடுகின்றனர்.

  • மயிலாடுதுறை தொகுதியில் பாமக சார்பில் சித்தமல்லி பழனிசாமியும், காங்கிரஸ் சார்பில் ஜமால் யூனுஸ் முகமதும் போட்டியிடுகின்றனர்.

  • சோளிங்கர் தொகுதியில் பாமக சார்பில் சரவணனும், காங்கிரஸ் சார்பில் முனிரத்னமும் போட்டியிடுகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com