சட்டசபை தேர்தல்: ஆயிரத்திற்கும் குறைவான வாக்கு வித்தியாசத்தில் வென்றவர்கள் யார்..?

திருப்பத்தூர் தொகுதியில் த.வெ.க. வேட்பாளர் ஸ்ரீனிவாச சேதுபதி, தி.மு.க. வேட்பாளர் பெரியகருப்பனை 1 வாக்கு வித்தியாசத்தில் தோற்கடித்தார்.
சட்டசபை தேர்தல்: ஆயிரத்திற்கும் குறைவான வாக்கு வித்தியாசத்தில் வென்றவர்கள் யார்..?
Published on

சென்னை,

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில், 15 தொகுதியில் 1,000-க்கும் குறைவான வாக்குகளே வெற்றி - தோல்வியை நிர்ணயித்துள்ளது.

அதன் விவரம் வருமாறு:-

கம்பம் தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் ராமகிருஷ்ணனை த.வெ.க. வேட்பாளர் ஜெகநாத்மிஸ்ரா 751 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தினார்.

கள்ளக்குறிச்சி தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் ராஜீவ்காந்தியை த.வெ.க. வேட்பாளர் அருள் விக்னேஷ் 798 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

கன்னியாகுமரி தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் ஆர்.மகேஷை அ.தி.மு.க. வேட்பாளர் தளவாய்சுந்தரம் 214 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

கோவில்பட்டி தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் கருணாநிதி, த.வெ.க. வேட்பாளர் பாலசுப்பிரமணியனை 843 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தினார்.

குளித்தலை தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் ஏ.சந்திரன், த.வெ.க. வேட்பாளர் ஜி.பாலசுப்பிரமணியை 579 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

கும்பகோணம் தொகுதியில் த.வெ.க. வேட்பாளர் வினோத், தி.மு.க. வேட்பாளர் அன்பழகனை 679 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

பழனி தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் ரவி மனோகரன், த.வெ.க. வேட்பாளர் பிரவீண்குமாரை 693 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

பரமத்தி வேலூர் தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் சேகர், தி.மு.க. வேட்பாளர் மூர்த்தியை 308 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

போளூர் தொகுதியில் த.வெ.க. வேட்பாளர் அபிஷேக், தே.மு.தி.க. வேட்பாளர் சரவணனை 227 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

திண்டிவனம் தொகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் வன்னி அரசு, அ.தி.மு.க. வேட்பாளர் அர்ஜுனனை 734 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

திருக்கோவிலூர் தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் பழனிசாமி, த.வெ.க. வேட்பாளர் பரணி பாலாஜியை 285 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

திருப்பத்தூர் தொகுதியில் த.வெ.க. வேட்பாளர் ஸ்ரீனிவாச சேதுபதி, தி.மு.க. வேட்பாளர் பெரியகருப்பனை 1 வாக்கு வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

உதகமண்டலம் தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளர் போஜராஜன், தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் இப்ராகிம்மை 976 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

வேப்பனஹள்ளி தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் ஸ்ரீனிவாசன், அ.தி.மு.க. வேட்பாளர் கே.பி.முனுசாமியை 138 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

விக்கிரவாண்டி தொகுதியில் பா.ம.க. வேட்பாளர் சிவக்குமார், த.வெ.க. வேட்பாளர் விஜய் வடிவேலை 910 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com