ஜோதிடர் தற்கொலை

சேரன்மாதேவி அருகே ஜோதிடர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ஜோதிடர் தற்கொலை
Published on

சேரன்மாதேவி:

சேரன்மாதேவி அருகே கங்கனான்குளம் குடுகுடுப்பான் நகரை சேர்ந்த மாரியப்பன் என்பவர் மகன் அய்யப்பன் (வயது 30). இவர் ஜோதிடம் பார்க்கும் தொழில் செய்து வந்தார். இவருக்கு திருமணமாகி இசக்கியம்மாள் என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். சம்பவத்தன்று இரவு கணவன்-மனைவி இடையே குடும்பத்தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் விரக்தி அடைந்த அய்யப்பன், வீட்டின் கதவை பூட்டிக் கொண்டு தூக்கில் தொங்கியுள்ளார். இதனைக் கண்ட அக்கம் பக்கத்தினர் உடனடியாக சேரன்மாதேவி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து சென்ற பார்த்தபோது அய்யப்பன் பிணமாக கிடந்தார். பின்னர் அவரது உடலை மீட்டு பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com