வடமதுரை காவல் நிலையத்தில் கல்லூரி மாணவி காதலனுடன் தஞ்சம்

வடமதுரை காவல் நிலையத்தில் கல்லூரி மாணவி பாதுகாப்பு கேட்டு காதலனுடன் தஞ்சம் அடைந்து உள்ளார்.
வடமதுரை காவல் நிலையத்தில் கல்லூரி மாணவி காதலனுடன் தஞ்சம்
Published on

வடமதுரை,

திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே உள்ள தம்பிநாயக்கன்பாறைப்பட்டியை சேர்ந்தவர் நதியா(வயது 20). இவர் திண்டுக்கல் அருகே உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் 3-ஆம் ஆண்டு படித்து வருகிறார்.

இவரது பக்கத்து வீட்டிற்கு கரூர் மாவட்டம், முத்தகாம்பட்டியைச் சேர்ந்த ரமேஷ்(22) என்ற வாலிபர் அடிக்கடி வந்து செல்வார். அப்போது அவர்கள் இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு, கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர்.

இவர்களின் காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தால், காதலர்கள் இருவரும் தங்கள் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்துகொண்டனர்.

இந்த நிலையில் நதியாவை காணவில்லை என அவரது பெற்றோர் வடமதுரை போலீசில் புகார் செய்தனர். போலீசார் தங்களை தேடுவதை அறிந்த காதலர்கள் இருவரும் இன்று வடமதுரை காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர்.

போலீசார் இருதரப்பு பெற்றோரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் ரமேஷின் பெற்றோர் காதலை ஏற்றுக்கொண்டதால், மணமக்களை அவர்களுடன் அனுப்பிவைத்தனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com