விடிய, விடிய பரவலாக மழை

திருமருகல் பகுதியில் விடிய, விடிய பரவலாக மழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
விடிய, விடிய பரவலாக மழை
Published on

திட்டச்சேரி:

திருமருகல் ஒன்றிய பகுதிகளில் கடந்த சில நாட்களாக கடுமையான வெயில் சுட்டெரித்து வந்தது.இதனால் பொதுமக்கள் பகலில் வெளியே வராமல் வீடுகளில் முடங்கி கிடந்தனர். பகலில் சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கம் இரவிலும் காணப்பட்டது.இந்த நிலையில் திருமருகல் ஒன்றியத்தில் நேற்று முன்தினம் இரவு முதல் விடிய, விடிய பரவலாகமழை பெய்தது. திட்டச்சேரி, திருமருகல், அண்ணாமண்டபம், திருக்கண்ணபுரம், திருச்செங்காட்டங்குடி, குத்தாலம், நரிமணம், திருப்புகலூர், அகரக்கொந்தகை உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் விடிய விடிய காற்றுடன் மழை பெய்தது. இதனால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. வெயிலின் தாக்கத்தினால் அவதிப்பட்டு வந்த பொதுமக்கள் இந்த மழையால் வெப்பம் தணிந்து மகிழ்ச்சி அடைந்தனர். குறுவை சாகுபடி செய்துள்ள விவசாயிகளுக்கு போதிய அளவு பாசனத்திற்கு நீர் கிடைத்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com