கட்டிட தொழிலாளி வீட்டில்நகை, பணம் திருட்டு

உடன்குடியில் கட்டிட தொழிலாளி வீட்டில் நகை, பணம் திருடிட மர்ம நபரை போலீசார் தேடிவருகின்றனர்.
கட்டிட தொழிலாளி வீட்டில்நகை, பணம் திருட்டு
Published on

குலசேகரன்பட்டினம்:

உடன்குடி மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் செல்வன் (45). கட்டிடதொழிலாளி. இவர் கடந்த 25-ந்தேதி வீடு அருகிலுள்ள கோவிலில் வேலைக்கு சென்றார். அப்போது வீட்டை பூட்டாமல் சென்றுள்ளார். அவரது மனைவியும் வெளியே சென்றிருந்தாராம். இதை நோட்டமிட்ட மர்மநபர் அவரது வீட்டிற்குள் புகுந்து, பீரோவிலிருந்த ரூ.1.60 லட்சம் மதிப்பிலான நகைகள், ரூ.10 ஆயிரத்தை திருடி சென்று விட்டாராம். இதுகுறித்த புகாரின் பேரில் குலசேகரன்பட்டினம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கட்டிட தொழிலாளி வீட்டில் நகை, பணம் திருடிய மர்ம நபரை தேடிவருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com