வாடிப்பட்டியில் ஆரோக்கிய அன்னை ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

வாடிப்பட்டியில் ஆரோக்கிய அன்னை ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
வாடிப்பட்டியில் ஆரோக்கிய அன்னை ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
Published on

வாடிப்பட்டி, 

வாடிப்பட்டியில் ஆரோக்கிய அன்னை ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

ஆரோக்கிய அன்னை ஆலயம்

தென்னகத்து வேளாங்கண்ணி என்று போற்றப்படும் புகழ்வாய்ந்த வாடிப்பட்டி ஆரோக்கிய அன்னை ஆலய திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி நேற்று மாலை 6.15 மணிக்கு மதுரை மறைமாவட்டபேராயர் அந்தோணி பாப்புசாமி தலைமையில் அன்னையின் கொடியேற்றமும் சிறப்பு திருப்பலியும் நடந்தது. இந்த விழாவை காண்பதற்கு மதுரை, திண்டுக்கல், தேனி, விருதுநகர், சிவகங்கை, கன்னியாகுமரி, தூத்துக்குடி உள்ளிட்ட பல மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வேன், கார், பஸ்களில் வந்து கலந்து கொண்டனர். மறையுரை கருத்துகள் கூறப்பட்டு சிறப்பு திருப்பலி நடந்தது.

வருகிற 8-ந்தேதி ஆரோக்கிய அன்னையின் பிறப்புப்பெருவிழா, இறைவார்த்தை சபை 148-வது எஸ்.வி.டி. பிறப்பு விழா, அற்புத ஜீவஊற்று இயேசுவின் அருமருந்து 23-வதுஆண்டு பிறப்பு விழா ஆகியவை நடக்கிறது. அன்று மாலை 5 மணிக்கு நற்கருணை ஆராதனையும், 6 மணிக்கு முப்பெரும் விழா கூட்டுத்திருப்பலியையும் தர்மபுரி மறைமாவட்ட ஆயர் லாரன்ஸ் பயஸ்துரைராஜ்; நடத்துகிறார்.

தேர்பவனி

இரவு 7 மணிக்கு வண்ண விளக்குகள் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட அன்னையின் தேர்பவனி நடக்கிறது. 9-ந்தேதி காலை 6.30 மணிக்கு ஆரோக்கிய அன்னையின் திருக்கொடி பங்குதந்தை வளன் தலைமையில் இறக்கப்பட்டு நன்றி திருப்பலியுடன் விழா நிறைவுபெறுகிறது.

திருவிழா ஏற்பாடுகளை எஸ்.வி.டி.அதிபர் வளன், எஸ்.வி.டி. நிர்வாகி ஆன்றனி வினோ, உதவி பங்கு தந்தை அடைக்கலராஜ் அடிகளார் மற்றும் இருபால் துறவியர் அன்பியங்கள் பங்குமக்கள் ஆகியோர் செய்துவருகின்றனர்.

இதன் பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்து தலைமையில் போலீசார் செய்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com