தூத்துக்குடியில், 17-ந் தேதி குடிநீர் வினியோகம் நிறுத்தம்

தூத்துக்குடியில், 17-ந் தேதி குடிநீர் வினியோகம் நிறுத்தப்படும் என்று ஆணையாளர் தினேஷ்குமார் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடியில், 17-ந் தேதி குடிநீர் வினியோகம் நிறுத்தம்
Published on

தூத்துக்குடி மாநகராட்சிக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படும் கலியாவூர் தலைமை நீரேற்று நிலையம், கீழ வல்லநாடு குடிநீர் சுத்திகரிப்பு நிலைய பகுதிக்கு வரும் மின்சார பாதையான கொம்பு கார நத்தம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் வருகிற 17-ந் தேதி நடக்கிறது. இதனால் அன்றைய தினம் மாநகராட்சி பகுதியில் குடிநீர் வினியோகம் இருக்காது. எனவே பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என்று, மாநகராட்சி ஆணையாளர் தினேஷ்குமார் தெரிவித்து உள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com