உடன்குடி தேரியூர் பள்ளியில் மாணவர்களுக்கு இலவச சைக்கிள்

உடன்குடி தேரியூர் பள்ளியில் மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
உடன்குடி தேரியூர் பள்ளியில் மாணவர்களுக்கு இலவச சைக்கிள்
Published on

உடன்குடி:

உடன்குடி தேரியூர் ஸ்ரீ ராமகிருஷ்ண சிதம்பரேஸ்வரர் மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசின் இலவச சைக்கிள்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

பள்ளித் தலைமையாசிரியர் லிங்கேஸ்வரன் தலைமை வகித்து அனைவரையும் வரவேற்றார். பள்ளி முன்னாள் மாணவர்கள் சங்க தலைவர் ஜீவானந்தம் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக செட்டியாபத்து ஊராட்சி மன்றத் தலைவர் க.பாலமுருகன் கலந்து கொண்டு 72 மாணவ, மாணவிகளுக்கு சைக்கிள்களை வழங்கி தமிழக அரசு மாணவர்களுக்கும், கல்வி வளர்ச்சிக்கும் செயல்படுத்தி வரும் திட்டங்கள் குறித்து பேசினார். இதில் ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்துகொண்டனர். ஆசிரியை திலகவதி நன்றி கூறினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com