பணியின்போதுமின்கம்பம் முறிந்ததில் ஊழியர் படுகாயம்

கூடலூரில் பணியின்போது மின்கம்பம் முறிந்ததில் ஊழியர் படுகாயம் அடைந்தார்.
பணியின்போதுமின்கம்பம் முறிந்ததில் ஊழியர் படுகாயம்
Published on

கூடலூர் நகர பகுதிகளில் சாலை விரிவாக்க பணிகளுக்காக ஆக்கிரமிப்புகள் அகற்றி, மரங்கள் வெட்டி அகற்றப்பட்டு வரப்படுகிறது. மேலும் மின்கம்பங்களும் மாற்றி அமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்நிலையில் நேற்று கூடலூர் மெயின்பஜார் சாலை ராஜாங்கம் சிலை அருகே உள்ள மின்கம்பம் மாற்றி அமைக்கும் பணி நடைபெற்றது. அப்போது நாராயணத்தேவன்பட்டியைச் சேர்ந்த தற்காலிக பணியாளரான சுஜித் (வயது 26) என்பவர் பழைய மின்கம்பத்தை மாற்றுவதற்காக மின்கம்பத்தில் ஏறி வேலை செய்து கொண்டிருந்தார்.

அப்போது எதிர்பாராதவிதமாக மின்கம்பம் முறிந்தது. இதில் கீழே விழுந்ததில் சுஜித் படுகாயம் அடைந்தார். அவரை சக ஊழியர்கள் மீட்டு சிகிச்சைக்காக கம்பம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து கூடலூர் தெற்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com