முன்விரோதத்தில் வீடு புகுந்து 3 பேர் மீது தாக்குதல்; 2 பேர் கைது

முன்விரோதத்தில் வீடு புகுந்து 3 பேர் மீது தாக்குதலில் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
முன்விரோதத்தில் வீடு புகுந்து 3 பேர் மீது தாக்குதல்; 2 பேர் கைது
Published on

பள்ளிப்பட்டு தாலுகா கீளப்பூடி கிராமம் விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் எல்லப்பன் (வயது 43). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த சதீஷ்குமார் என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. எல்லப்பன் நேற்று முன்தினம் அவர் வீட்டின் அருகே உள்ள தங்கை வீட்டில் அவரது மாமா உடன் சென்று பேசிக்கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த சதீஷ்குமார், ராஜேந்திரன் ஆகியோர் வீடு புகுந்து எல்லப்பன் மற்றும் அவரது மாமாவை இரும்பு கம்பியால் தாக்கினர். அவர்களது அலறல் சத்தம் கேட்டு எல்லப்பனின் தந்தை சண்முக ரெட்டி அங்கு ஓடிவந்தார். அவரையும் தாக்கிவிட்டு இருவரும் தப்பினர். பின்னர் சதீஷ்குமாரின் தந்தை பாலன் மற்றும் உறவினர்களும் அங்கு வந்து எல்லப்பனின் தங்கை வீட்டில் கற்கறை வீசி தாக்கினர்.இந்த சம்பவத்தில் படுகாயம் அடைந்த எல்லப்பன், அவரது தந்தை சண்முக ரெட்டி, எல்லப்பனின் மாமா ஆகிய 3 பேரையும் உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக பொதட்டூர்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் பொதட்டூர்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து சதீஷ்குமாரின் உறவினர்கள் சிவா (50), ரோஸ் (54) ஆகிய 2 பேர் கைது செய்தனர். தலைமறைவாக இருக்கும் சதீஷ்குமார், ராஜேந்திரன், பாலன் ஆகிய 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com