இந்து மக்கள் கட்சி நிர்வாகி மீது தாக்குதல்

தேனி அருகே இந்து மக்கள் கட்சி நிர்வாகி மீது தாக்குதல் நடத்திய 9 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்து மக்கள் கட்சி நிர்வாகி மீது தாக்குதல்
Published on

தேனி மாவட்டம், கடமலைக்குண்டு அருகே மூலக்கடை மந்திச்சுனையை சேர்ந்தவர் வேல்முருகன் (வயது 40). இவர் இந்து மக்கள் கட்சியின் தேனி மாவட்ட செயலாளராக உள்ளார். இவரிடம், தேனி சுக்குவாடன்பட்டியை சேர்ந்த ஆண்டவர் (50) என்பவர் டிரைவராக வேலை பார்த்து வந்தார். பின்னர் அவரை வேலையில் இருந்து நிறுத்திவிட்டார். இதனால், தனது சம்பள பாக்கியை கொடுக்குமாறு ஆண்டவர் கேட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், வேல்முருகன் தனது குடும்பத்தினருடன் ஒரு காரில் கடந்த 20-ந்தேதி வீரபாண்டிக்கு சென்று கொண்டிருந்தார். கொடுவிலார்பட்டி அருகே தண்ணீர் தொட்டி அருகில் சென்ற போது, ஆண்டவர் மற்றும் சிலர் மற்றொரு காரில் வந்து வழிமறித்து தகராறு செய்தனர். அப்போது வேல்முருகனை அவர்கள் இரும்பு கம்பியால் தாக்கினர். இதில் அவர் காயம் அடைந்தனர். அவர் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து அவர் கொடுத்த புகாரின் பேரில், ஆண்டவர் உள்பட 9 பேர் மீது பழனிசெட்டிபட்டி போலீசார் நேற்று முன்தினம் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com