கள்ளக்குறிச்சி அருகேமாணவியை தாக்கி கொலைமிரட்டல்தந்தை-மகன் மீது வழக்கு

கள்ளக்குறிச்சி அருகே மாணவியை தாக்கி கொலைமிரட்டல் விடுத்ததாக தந்தை-மகன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி அருகேமாணவியை தாக்கி கொலைமிரட்டல்தந்தை-மகன் மீது வழக்கு
Published on

திருக்கோவிலூர்,

கள்ளக்குறிச்சி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 17 வயது மாணவி. இவர் நாமக்கல்லில் தங்கி, அங்குள்ள நீட் கோச்சிங் சென்டரில் பயிற்சி பெற்று வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு மாணவி சொந்தஊருக்கு வந்திருந்தார். இதுபற்றி அறிந்த உறவினரான 27 வயது வாலிபர் மாணவியிடம் ஏன் என்னிடம் முன்புபோல் பேச மறுக்கிறாய் எனவும், என்னிடம் தொடர்ந்து பேச வேண்டும் எனவும் கூறியுள்ளார். அதற்கு மாணவி மறுப்பு தெரிவித்ததாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த வாலிபர் அந்த மாணவியை உறவினர் வீட்டுக்கு அழைத்துச் சென்று ஆடைகளை களைந்து, இரும்பு குழாயால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது. மேலும் அங்கு வந்த வாலிபரின் தந்தையும் மாணவிக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது. இதுகுறித்து மாணவி திருக்கோவிலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் மாணவியை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்ததாக தந்தை-மகன் மீது போலீஸ் இன்ஸ்பெக்டர் ராதிகா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். இந்த சம்பவம் கள்ளக்குறிச்சி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

X

Daily Thanthi
www.dailythanthi.com