காதலை தொடர மறுத்த சிறுமியை கழுத்தை அறுத்து கொலை செய்ய முயற்சி - வாலிபர் கைது

படுகாயமடைந்த சிறுமியை அக்கம் பக்கத்தினர் மருத்துவமனையில் சேர்த்தனர்.
காதலை தொடர மறுத்த சிறுமியை கழுத்தை அறுத்து கொலை செய்ய முயற்சி - வாலிபர் கைது
Published on

திண்டுக்கல்,

திண்டுக்கல்லை சேர்ந்த 16 வயது சிறுமி மற்றும் வேடசந்தூர், ஆத்துமேடு பகுதியை சேர்ந்த பேட்ரிக் சிலுவைமுத்து(19) இருவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது இந்நிலையில் சிறுமியின் பெற்றோர்கள் கண்டித்தது தொடர்ந்து சிறுமி பேட்ரிக் சிலுவைமுத்துடன் பேச மறுத்துள்ளார்.

இந்நிலையில் சிறுமியின் வீட்டிற்கு சென்ற பேட்ரிக் சிலுவைமுத்து, தன்னை காதலிக்குமாறு சிறுமியிடம் வற்புறுத்தியுள்ளார். ஆனால் சிறுமி இதற்கு மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பேட்ரிக் சிலுவைமுத்து, சிறுமியை தன் கையில் வைத்திருந்த பிளேடால் கழுத்தை அறுத்து கொலை செய்ய முயற்சித்துள்ளார்.

இதில் படுகாயமடைந்த சிறுமியை அக்கம் பக்கத்தினர் மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், பேட்ரிக் சிலுவை முத்துவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com