

சென்னை,
பயணிகள் கூட்ட நெரிசலை கருத்தில் கொண்டு சென்னை - ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் இடையே சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. இது தொடர்பாக, தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
ஜோத்பூரில் இருந்து ஜூன் 27, ஜூலை 4, 11, 18 மற்றும் 25 ஆகிய தேதிகளில் (சனிக்கிழமை) இரவு 9.20 மணிக்கு இயக்கப்படும் சிறப்பு ரெயில் (வண்டி எண் 04815) 3-வது நாள் இரவு 8 மணிக்கு சென்னை கடற்கரையை வந்தடையும்.
மறுமார்க்கத்தில், எம்.ஜி.ஆர். சென்னை சென்டிரலில் இருந்து ஜூன் 30, ஜூலை 7, 14, 21, 28 ஆகிய தேதிகளில் (செவ்வாய்கிழமை) மாலை 5.15 மணிக்கு இயக்கப்படும் சிறப்பு ரெயில் (04816) 3-வது நாள் இரவு 8.30 மணிக்கு ஜோத்பூரை சென்றடையும். 19 பெட்டிகளை கொண்ட இந்த சிறப்பு ரெயிலுக்கான முன்பதிவு நாளை (20-ந் தேதி) காலை 8 மணிக்கு தொடங்குகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.