பயணிகள் கவனத்திற்கு.. மங்களூரு - ராமேஸ்வரம், தாம்பரம் - ராமேஸ்வரம் ரெயில்களில் கூடுதலாக 2 ஏ.சி. பெட்டிகள் இணைப்பு

பயணிகள் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டதை தொடர்ந்து இந்த கூடுதல் பெட்டிகள் இணைக்கப்படுகின்றன.

பயணிகள் கவனத்திற்கு.. மங்களூரு - ராமேஸ்வரம், தாம்பரம் - ராமேஸ்வரம் ரெயில்களில் கூடுதலாக 2 ஏ.சி. பெட்டிகள் இணைப்பு
Published on

சென்னை,

மங்களூரு - ராமேஸ்வரம், தாம்பரம் - ராமேஸ்வரம் இடையே இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் கூடுதலாக 2 ஏ.சி. பெட்டிகள் இணைக்கப்படுகின்றன.

இது தொடர்பாக, தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

பயணிகள் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டதை தொடர்ந்து மங்களூரு சென்டிரல் - ராமேஸ்வரம் இடையே இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரெயிலில் (வண்டி எண்கள் 16622/16621) கூடுதலாக 2 ஏ.சி. 3-ம் வகுப்பு பெட்டிகள் நிரந்தரமாக இயக்கப்படுகின்றன. இதன் மூலம் 20 பெட்டிகளை கொண்ட இந்த ரெயில், 22 பெட்டிகளை கொண்டதாக மாறுகிறது.

இந்த கூடுதல் பெட்டிகள் இணைக்கப்படுவது மங்களூரு சென்டிரலில் இருந்து அக்டோபர் 3-ந் தேதியும், ராமேஸ்வரத்தில் இருந்து அக்டோபர் 4-ந் தேதியும் அமலுக்கு வருகிறது.

இதேபோல், தாம்பரம் - ராமேஸ்வரம் இடையே இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரெயிலில் (வண்டி எண்கள் 16103/16104) ஒரு ஏ.சி. 2-ம் வகுப்பு பெட்டியும், ஒரு ஏ.சி. 3-ம் வகுப்பு பெட்டியும் நிரந்தரமாக இணைக்கப்படுகிறது. இந்த நடைமுறை தாம்பரத்தில் இருந்து அக்டோபர் 1-ந் தேதியும், ராமேஸ்வரத்தில் இருந்து அக்டோபர் 2-ந் தேதியும் அமலுக்கு வருகிறது. இதன் மூலம் 19 பெட்டிகளை கொண்ட இந்த ரெயில் 21 பெட்டிகளைக் கொண்டதாக உயருகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com