நடைபயிற்சி செல்வோர் கவனத்திற்கு...மாசு கட்டுப்பாட்டு வாரியம் கூறிய முக்கிய தகவல்

சென்னையில் திடீரென மாறிய வானிலையால் அதிகாலை மற்றும் மாலை வேளைகளில் காற்று மாசு அதிகமாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாசு கட்டுப்பாட்டு வாரியம் கூறிய முக்கிய தகவல்
Published on: 

சென்னை,

சென்னையில் மாறிய வானிலையால் காற்று மாசு அதிகரித்துள்ளது. இதனால் நுரையீரல், இதய பிரச்சினை உள்ளவர்களுக்கு மூச்சுவிடுவதில் சிரமம் ஏற் படலாம் என மாசுக்கட் டுப்பாட்டுவாரியம் எச்சரித்துள்ளது.

இது குறித்து தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிமாசுக்கட்ப்பாட்டுவாரியம் கூறியுள்ளதாவது,

பருவ நிலைமாற்றத்தால் காற்றில் ஏற்படும் இந்த தற்காலிக மாறுபாடு, ஆஸ்துமா, போன்ற நுரையீரல் நோயாளிகள் மற்றும் இதய நோய் உள்ளவர்களின் ஆரோக்கியத்தை பாதிக்கலாம். எனவே முக்கிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

குறிப்பாக அதிகாலை மற்றும் மாலை வேளைகளில் காற்று மாசு அதிகமாக இருக்கும் என்பதால், தேவையின்றி வெளியே செல்வதைத் தவிர்க்க வேண்டும்.

தவிர்க்க முடியாமல் வெளியே செல்ல நேர்ந் தால், காற்றில் உள்ள நுண் துகள்களைத் தடுக்கும் முகக்கவசங்களை அணிய வேண்டும். ஆஸ்துமா மற்றும் அலர்ஜி உள்ளவர்கள் தங்களின் இன்ஹே லர்கள் மற்றும் மருத்துவர் பரிந்துரைத்த மருந்துகளைத் தவறாமல் கையில் வைத்திருக்க வேண்டும்.

பூங்காக்கள் அல்லது திறந்தவெளிகளில் நடைப் பயிற்சி செய்வதைத் தவிர்த்து வீட்டிற்குள்ளேயே உடற்ப யிற்சிகளை மேற்கொள்ளலாம். நெஞ்சு வலி, வழகத்திற்கு மாறான மூச்சுத்திணறல் அல்லது கடுமையான இருமல் ஏற்பட்டால், தாமதிக்காமல் உடனடியாக மருத்துவரை அணுகுவது அவசியமாகும்.

இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

X