ஆகஸ்ட் 5ம்தேதி தூத்துக்குடி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை: கலெக்டர் அறிவிப்பு

தூய பனிமய மாதா பேராலய பெருவிழாவை முன்னிட்டு ஆகஸ்ட் 5ம்தேதி தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறை என்று கலெக்டர் இளம்பகவத் அறிவித்துள்ளார்.
தூத்துக்குடி
தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் இளம்பகவத் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
தூத்துக்குடி, தூய பனிமய மாதா திருத்தலப் பேராலய பெருவிழா ஆகஸ்ட் 5-ம்தேதி கொண்டாடப்படுவதை முன்னிட்டு வருகிற 5.8.2025, செவ்வாய்கிழமை தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறையாக அறிவிக்கப்படுகிறது.
எனினும் அத்தியாவசிய பணிகள்/ பணியாளர்களுக்கு இவ்விடுப்பு பொருந்தாது என தெரிவிக்கப்படுகிறது. இது செலவாணி முறிச் சட்டத்தின்படி (Negatiable Instruments Act 1881) பொது விடுமுறை நாளல்ல எனத் தெரிவிக்கப்படுகிறது. இந்த விடுமுறைக்கு பதிலாக 9.8.2025 இரண்டாம் சனிக்கிழமை அலுவலக நாளாக அறிவிக்கப்படுகிறது.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story






