தடுப்புச்சுவரில் ஆட்டோ மோதி டிரைவர் சாவு

தேனி அருகே தடுப்புச்சுவரில் ஆட்டோ மோதி டிரைவர் பலியானார்.
தடுப்புச்சுவரில் ஆட்டோ மோதி டிரைவர் சாவு
Published on

தேனி கொண்டுராஜா பள்ளிக்கு பின்புறம் உள்ள குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் சோலைராஜா (வயது 36). ஆட்டோ டிரைவர். நேற்று இவர் தனது ஆட்டோவில் தேனி மதுரை சாலையில் சென்று கொண்டு இருந்தார். பங்களாமேடு பகுதியை கடந்து சென்ற போது எதிர்பாராதவிதமாக சாலையின் மையத் தடுப்புச்சுவரில் ஆட்டோ மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த சோலைராஜாவை அக்கம்பக்கத்தினர் மீட்டு தேனி அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். 

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com