ஆட்டோ டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை

மார்த்தாண்டம் அருகே ஆட்டோ டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை
ஆட்டோ டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை
Published on

குழித்துறை, 

மார்த்தாண்டம் அருகே காப்புக்காடு பெருவிளையை சேர்ந்தவர் ஜஸ்டின் (வயது 42). ஆட்டோ டிரைவரான இவருக்கு திருமணமாகி 13 வருடமாகிறது. குழந்தை இல்லை. மேலும் இவருடைய கல்லீரல் பாதிக்கப்பட்டதாக தெரிகிறது.

இந்தநிலையில் நேற்று முன்தினம் ஜஸ்டின் வீட்டு மாடியில் உள்ள அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி தகவல் அறிந்ததும் மார்த்தாண்டம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com