கொழுந்தியாவுக்கு ஆசைப்பட்ட ஆட்டோ டிரைவர் வெட்டிக்கொலை.. மைத்துனரின் வெறிச்செயல்


கொழுந்தியாவுக்கு ஆசைப்பட்ட ஆட்டோ டிரைவர் வெட்டிக்கொலை.. மைத்துனரின் வெறிச்செயல்
x

ரத்தக்காயங்களுடன் ஆட்டோ டிரைவர் பிணம் கிடந்த சம்பவத்தில் மைத்துனரே கொன்றது தெரியவந்தது.

திருவண்ணாமலை

ஆரணி,

ஆரணி ஆரணிப்பாளையம் டி.ஆர்.எஸ்.நகர் பகுதியை சேர்ந்தவர் கணபதி (வயது 30), ஆட்டோ டிரைவர். இவர், பையூர் எம்.ஜி.ஆர். நகர் பகுதியை சேர்ந்த மோனிஷா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். இந்த நிலையில் ஆரணியை அடுத்த மொழுகம்பூண்டி கிராமத்தில் நேற்று முன்தினம் ரத்த காயங்களோடு கணபதி பிணமாக கிடந்தார்.

இதுகுறித்த புகாரின் பேரில் ஆரணி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து, கணபதியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தியதில், மோனிஷாவின் சகோதரர் மகேஸ்வரன் (24) கொலை செய்தது தெரியவந்தது.

இதனையடுத்து போலீசார் அவரை பிடித்து விசாரணை மேற்கொண்டதில் திடுக்கிடும் தகவல் வெளியாகின. கணவன்-மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மோனிஷா வேறொருவருடன் சென்றுவிட்டார். இதனால் குழந்தைகள் மகேஸ்வரன்(மோனிஷாவின் சகோதரர்) வீட்டில் இருந்தனர். இதனால் கணபதி அடிக்கடி குழந்தைகளை பார்க்க வரும் போது, மற்றொரு சகோதரியுடன் (கொழுந்தியாள்) பழகியுள்ளார். மேலும் அவருக்கு திருமண ஏற்பாடு செய்வதை அறிந்து, கொழுந்தியாளை தனக்கே திருமணம் செய்து கொடுக்கும்படி தகராறு செய்துள்ளார். இதனால் மதுபோதையில் இருந்த அவரை மகேஸ்வரன் கத்தியால் வெட்டிக்கொலை செய்தது தெரியவந்தது. அதைத் தொடர்ந்து போலீசார் மகேஸ்வரனை கைது செய்தனர்.

1 More update

Next Story