ஆட்டோ டிரைவருக்கு கத்திவெட்டு

விருத்தாசலம் அருகே ஆட்டோ டிரைவரை கத்தியால் வெட்டியவர் கைது செய்யப்பட்டார்.
ஆட்டோ டிரைவருக்கு கத்திவெட்டு
Published on

விருத்தாசலம், 

விருத்தாசலம் அருகே உள்ள கார்குடல் கிராமத்தை சேர்ந்தவர் ஞானசேகரன் (வயது 40). ஆட்டோ டிரைவரான இவர் சிதம்பரம் சாலையில் சென்றபோது, பூந்தோட்டம் பகுதியை சேர்ந்த ரங்கன் மகன் காசிநாதன் மற்றும் அவரது நண்பர்கள் 3 பேர் சேர்ந்து திட்டி தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தனர். மேலும் காசிநாதன், கத்தியால் ஞானசேகரனை தலையில் வெட்டினார். இதில் படுகாயமடைந்த ஞானசேகரன் விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்த புகாரின் பேரில் விருத்தாசலம் போலீசார் வழக்குப் பதிவு செய்து காசிநாதனை கைது செய்தனர். மற்ற 3 பேரை தேடி வருகின்றனர். 

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com