ஆட்டோ டிரைவர் தற்கொலை

ஆட்டோ டிரைவர் தற்கொலை
ஆட்டோ டிரைவர் தற்கொலை
Published on

கன்னியாகுமரி:

கொட்டாரம் அருகே உள்ள பொற்றையடி பகுதியை சேர்ந்தவர் அன்பு (வயது 42), ஆட்டோ டிரைவர். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. பெற்றோர் இறந்து விட்டதால் அன்பு வீட்டில் தனியாக வசித்து வந்தார். இதனால், வாழ்க்கையில் விரக்தியடைந்த அன்பு கடந்த சில நாட்களாக மனமுடைந்த நிலையில் காணப்பட்டு வந்தார்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு தூங்கச் சென்ற அன்பு, நேற்று காலையில் வெகுநேரமாகியும் வீட்டை விட்டு வெளியே வரவில்லை. இதனால், சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் வீட்டின் ஜன்னல் வழியாக பார்த்தபோது அன்பு தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனே, இதுபற்றி கன்னியாகுமரி போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அன்புவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com