ஆட்டோ டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை

சேந்தமங்கலம் அருகே ஆட்டோ டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ஆட்டோ டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை
Published on

சேந்தமங்கலம்

ஆட்டோ டிரைவர்

சேந்தமங்கலம் அருகே உள்ள பழையபாளையம் பம்பைக்காரர் தெருவை சேர்ந்தவர் சக்திவேல். இவரது மனைவி பார்வதி. இவர்களது மகன் தினேஷ் (வயது 19). இவர் ஆட்டோ டிரைவராக வேலை பார்த்து வந்தார். இந்தநிலையில் தினேஷ் அதே பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

இதையறிந்த அவரது தாயார் பார்வதி, தினேஷை கண்டித்துள்ளார். இதனால் அவர் மனமுடைந்து காணப்பட்டார். அதையடுத்து தினேஷ் தற்கொலை செய்து கொள்ள முடிவு எடுத்தார். கடந்த 11-ந் தேதி வீட்டில் யாரும் இல்லாததை அறிந்துகொண்டு தினேஷ் தூக்குப்போட்டு தற்கொலை செய்ய முயற்சித்தார். அதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர் தினேஷை காப்பாற்றி நாமக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

சாவு

அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து சேந்தமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். காதலித்ததை தாயார் கண்டித்ததால் ஆட்டா டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com