தூத்துக்குடியில் ஆட்டோ கவிழ்ந்து விபத்து: ஓட்டுனர் உயிரிழப்பு

தூத்துக்குடியைச் சேர்ந்த ஒருவர், தனது ஆட்டோவில் எட்டயபுரம் சாலை, ஜோதி நகர் விலக்கு அருகே சென்றபோது, ஆட்டோ தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
ஆட்டோ கவிழ்ந்து விபத்து
Published on

தூத்துக்குடி,

தூத்துக்குடி எட்டயபுரம் சாலையில் ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்த ஓட்டுனர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

ஆட்டோ கவிழ்ந்து விபத்து:

தூத்துக்குடி எப்.சி.ஐ. குடோன் எதிர்புறம் உள்ள இந்திராநகர் பகுதியைச் சேர்ந்தவர் மருதுபாண்டி (வயது 56). ஆட்டோ ஓட்டுனரான இவர், கடந்த ஜூன் 7-ம் தேதி எட்டயபுரம் சாலை, ஜோதி நகர் விலக்கு அருகே தனது ஆட்டோவில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக ஆட்டோ கட்டுப்பாட்டை இழந்து சாலையில் தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

சிகிச்சை பலனின்றி ஓட்டுனர் உயிரிழப்பு:

இந்த விபத்தில் படுகாயம் அடைந்த மருதுபாண்டியை மீட்ட அப்பகுதி மக்கள், தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்குள்ள தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த மருதுபாண்டி, இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து சிப்காட் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com