உப்புக்கோட்டை அருகே ஆட்டோ கவிழ்ந்து பெண் பலி

உப்புக்கோட்டை அருகே ஆட்டோ கவிழ்ந்து பெண் பலியானார்.
உப்புக்கோட்டை அருகே ஆட்டோ கவிழ்ந்து பெண் பலி
Published on

தேனி அருகே பொம்மையகவுண்டன்பட்டி பள்ளி ஓடை தெருவை சேர்ந்தவர் அம்பிகா (வயது 32). நேற்று முன்தினம் இவர், குச்சனூரில் உள்ள தனது உறவினர் இறந்ததால் துக்கம் விசாரிப்பதற்காக ஆட்டோவில் அங்கு சென்றார். அவருடன் தாய் பவுன்தாய், சகோதரி விமலா, அவரது கணவர் ஆனந்தன் ஆகியோரும் சென்றனர். ஆட்டோவை ஆனந்தன் ஓட்டினார். குச்சனூரில் துக்கம் விசாரித்துவிட்டு, 4 பேரும் பொம்மையகவுண்டன்பட்டி நோக்கி திரும்பி வந்துகொண்டிருந்தனர்.

உப்புக்கோட்டை அருகே மாணிக்காபுரம் பிரிவு பகுதியில் அவர்கள் வந்தபோது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து ஆட்டோ நிலைதடுமாறி சாலையில் கவிழ்ந்தது. இதில், ஆட்டோவில் வந்த 4 பேரும் படுகாயம் அடைந்தனர். இதையடுத்து அவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக வீரபாண்டி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அம்பிகாவை டாக்டர்கள் பரிசோதனை செய்தபோது, அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

பவுன்தாய் மேல் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். விமலா, ஆனந்தன் ஆகியோர் லேசான காயத்துடன் உயிர்தப்பினர். இதுகுறித்து வீரபாண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com