விவசாயிகள், மக்களுடன் தேனீர் அருந்திய அவிநாசி வேட்பாளர் எல். முருகன்

கட்சி சார்பற்ற விவசாய சங்க நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களை சந்தித்து அவிநாசி வேட்பாளர் எல். முருகன் ஆதரவு திரட்டினார்.
விவசாயிகள், மக்களுடன் தேனீர் அருந்திய அவிநாசி வேட்பாளர் எல். முருகன்
Published on

சென்னை,

தமிழக சட்டசபை தேர்தல் வரும் 23ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 4ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 27 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் பாஜக 27 தொகுதிகளில் போட்டியிடுகிறது. தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சியினர் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் அவிநாசி சட்டமன்ற தொகுதியில் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பாரதிய ஜனதா வேட்பாளரும் மத்திய தகவல் ஒளிபரப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சருமான எல். முருகன் அவர்கள் இன்று (08.04.2026) அவிநாசி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கருவலூர் உள்ளிட்ட பகுதிகளில் தேர்தல் பிரச்சாரம் செய்தார்.

கட்சி சார்பற்ற விவசாய சங்க நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களை சந்தித்து எல். முருகன் அவர்கள் ஆதரவு திரட்டினார்.

அப்போது அவர்களுடன் இணைந்து அவர் தேனீர் அருந்தினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com