ஆன்லைன் லோன் ஆப்களை தவிர்த்து எச்சரிக்கையாக இருங்கள்: திருநெல்வேலி எஸ்.பி. சிலம்பரசன் அறிவுறுத்தல்

இணையதளத்தில் தற்போது மிக தீவிரமாக செயல்பட்டு வரும் ஆன்லைன் லோன் ஆப் மோசடி அனைத்து இடங்களிலும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
ஆன்லைன் லோன் ஆப்களை தவிர்த்து எச்சரிக்கையாக இருங்கள்: திருநெல்வேலி எஸ்.பி. சிலம்பரசன் அறிவுறுத்தல்
Published on

இணையதளத்தில் தற்போது மிக தீவிரமாக செயல்பட்டு வரும் ஆன்லைன் லோன் ஆப் (ONLINE LOAN APP) மோசடி அனைத்து இடங்களிலும் நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது.

மோசடி நடைபெறும் விதம்:

உங்களது தொலைபேசியில் வாட்ஸ்ஆப் வாயிலாக அறிமுகமில்லாத எண்களிலிருந்து நீங்கள் ஆன்லைன் லோன் ஆப்பில் லோன் எடுத்துள்ளதாகவோ அல்லது உங்களது நண்பர்கள், உறவினர்கள் லோன் எடுத்துள்ளதாகவோ கூறி அதற்கான பணத்தை செலுத்தக்கூறி தங்களது போட்டோ அல்லது தங்களது குடும்பத்தினரின் போட்டோவை எடுத்து அதை ஆபாசமாக சித்தரித்து பணம் கேட்டு மிரட்டுவார்கள்.

மேலும் ஆன்லைனில் லோன் ஆப்களில் கடன் பெறுவதற்கு அணுகும் போது உங்களின் செல்போனில் உள்ள தாடர்பு எண்கள் (mobile contacts) மற்றும் புகைப்படங்கள் (photos) ஆகிய தகவல்களை அவர்கள் பெற்றுக்கொண்டு தான் லோன் (Loan) கொடுப்பார்கள். கடன் பெற்ற தொகையைத் திருப்பி செலுத்திய பிறகும் நீங்கள் மேற்கொண்டு பணம் செலுத்த வேண்டியுள்ளது எனக்கூறி உங்கள் மொபைல் போனில் எடுக்கப்பட்ட உங்களது குடும்பத்தினரின் போட்டோக்களை ஆபாசமாக சித்தரித்து அதை உங்களது தொடர்பில் உள்ள அம்மா, அப்பா, அண்ணன், அக்கா மற்றும் உறவினர்கள் ஆகியோரின் செல்போன் எண்களுக்கு அனுப்பி உங்களை மிரட்டி பணம் பறிக்கக்கூடும்.

எனவே உங்களது போனில் உள்ள whatsapp privacy settings-ஐ மாற்றி கொண்டும், சமூக வலைதளங்களில் வரும் லோன் ஆப்களில் லோன் எடுப்பதை தவிர்க்க வேண்டும். மேலும் இது போன்று ஏமாற வேண்டாம் எனவும், எச்சரிக்கையாக இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்படுகிறது.

இது போன்ற சைபர் கிரைம் நடைபெற்றால் சைபர் கிரைம் இணையதளமான www.cybercrime.gov.in என்பதிலும், 1930 என்ற டோல் ப்ரீ (Toll Free) எண்ணிலும் அழைத்து உடனடியாக உங்களுடைய புகாரினை பதிவு செய்ய வேண்டும் என திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் தெரிவித்துள்ளார். 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com