நெல்லையில் கல்லூரி மாணவர்களிடம் பெண்கள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு

மானூர் அருகே கல்லூரி மாணவர்களிடம், போதைப் பொருட்களை பயன்படுத்துவதால் அது மூளையை மழுங்க செய்து சிந்திக்கும் திறனை அழித்துவிடும் என்று கூறி போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
நெல்லையில் கல்லூரி மாணவர்களிடம் பெண்கள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு
Published on

திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் அறிவுறுத்தலின்படி, மாவட்ட காவல் துறையினர் கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக மானூர் காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதியில் உள்ள மேலப்பிள்ளையார்குளம், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவ, மாணவியர்களுக்கு கல்லூரியின் முதல்வர் டாரதி முன்னிலையில், மானூர் பேலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் புகையிலை மற்றும் கஞ்சா போன்ற போதைப் பொருட்களை பயன்படுத்துவதால் ஏற்படும் தீங்குகள் குறித்து, மாணவர்கள் தனது அறியாமையால் சிலரின் தவறான நட்பு போன்ற பல காரணங்களால் போதை பழக்கம் ஏற்படுகிறது.

போதைப்பழக்கம் சமுதாயத்திற்கும் உடல் நலத்திற்கும் அழிவை தரக்கூடியது. போதைப் பொருட்களை பயன்படுத்துவதால் மூளையை மழுங்க செய்து சிந்திக்கும் திறனை அழித்துவிடும். எனவே போதைப் பொருட்களுக்கு அடிமையாகும் சூழலை தவிர்த்து ஆரோக்கியமான உடல், சமூகத்தை உருவாக்குவோம் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தினார். மேலும் பெண்கள் பாதுகாப்பு குறித்து பெண்கள் பாதுகாப்பு இலவச எண்களான 181 மற்றும் காவலன் SOS குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com