விழிப்புணர்வு சைக்கிள் பேரணி

வாசுதேவநல்லூரில் விழிப்புணர்வு சைக்கிள் பேரணி நடந்தது.
விழிப்புணர்வு சைக்கிள் பேரணி
Published on: 

வாசுதேவநல்லூர்:

வாசுதேவநல்லூர் பேரூராட்சியில் தீவிர தூய்மை பணி முகாம், சுதந்திர தின விழா விழிப்புணர்வு சைக்கிள் பேரணி நடைபெற்றது. முன்னதாக வாசுதேவநல்லூர் பேரூராட்சி பகுதிக்கு உட்பட்ட அனைத்து வீடுகளுக்கும் இலவசமாக தேசிய கொடி வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் நகர பஞ்சாயத்து தலைவர் லாவண்யா ராமேஸ்வரன், செயல் அலுவலர் மோகன மாரியம்மாள், கவுன்சிலர்கள் மாரிமுத்து, சரவணன் தவிடன், சக்திவேல் கோமதி சங்கர், பள்ளி மாணவர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர். 

X

Daily Thanthi
www.dailythanthi.com