உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு ஊர்வலம்

வேலூரில் உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு ஊர்வலம்
Published on

உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு ஊர்வலம் வேலூரில் இன்று நடைபெற்றது. ஊர்வலத்தை கலெக்டர் குமாரவேல்பாண்டியன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

ஊர்வலம் அண்ணா கலையரங்கத்தில் இருந்து தொடங்கி வேலூர் கோட்டை, மக்கான் சிக்னல் வழியாக வேலூர் பழைய பஸ் நிலையத்தில் முடிவடைந்தது.

ஊர்வலத்தில் பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவிகள் கலந்து கொண்டு கையில் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி கோஷங்களை எழுப்பியவாறு சென்றனர்.

இதில் மாநகராட்சி மாநகராட்சி மேயர் சுஜாதா, துணை மேயர் சுனில்குமார், வேலூர் அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவக்கல்லூரி டீன் பாப்பாத்தி, துணை இயக்குனர் (சுகாதார பணிகள்) பானுமதி, துணை இயக்குனர் (குடும்பநலம்) மணிமேகலை உள்பட பலர் கலந்து கொண்டனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com