தீயணைப்புத்துறை சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

தீயணைப்புத்துறை சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
தீயணைப்புத்துறை சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி
Published on

அருப்புக்கோட்டையில் தீயணைப்புத்துறை சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தீ விபத்தில் இருந்து பாதுகாப்பது குறித்த விழிப்புணர்வு ஒத்திகை நிகழ்ச்சி ராமசாமி நகரில் உள்ள ஒரு பள்ளியில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு தீயணைப்பு நிலைய அலுவலர் ராம்ராஜ் தலைமை தாங்கினார். தீயணைப்பு வீரர்கள் தீ விபத்து ஏற்பட்டால் எப்படி அணைப்பது குறித்தும்? தீ விபத்தில் சிக்கியவர்களை மீட்பது குறித்தும்? ஒத்திகை செய்து காண்பித்தனர். அதனை தொடர்ந்து தகவல்அறியும் உரிமை சட்டம்-2005 பற்றிய கட்டுரை போட்டி நடத்தப்பட்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் தீயணைப்பு நிலைய வீரர்கள், பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com