பழனியில் விழிப்புணர்வு ஊர்வலம்

பழனியில் வாக்களிப்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.
பழனியில் விழிப்புணர்வு ஊர்வலம்
Published on

திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம் சார்பில் வாக்களிப்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் மாவட்டம் முழுவதும் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, பழனியில் இன்று பள்ளி மாணவிகளின் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. இதற்கு தாசில்தார் சசிக்குமார் தலைமை தாங்கினார்.

பழனி டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் உதயக்குமார் முன்னிலை வகித்தார். பழனி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தொடங்கிய இந்த ஊர்வலம், ஆர்.எப்.ரோடு, கான்வென்ட் ரோடு, நால் ரோடு சந்திப்பு, புதுதாராபுரம் சாலை வழியாக சென்று மீண்டும் பள்ளியில் முடிவடைந்தது.

இந்த ஊர்வலத்தில் ஏராளமான பள்ளி மாணவிகள் கலந்துகொண்டனர். அப்போது அவர்கள், தேர்தலில் 100 சதவீத வாக்களிப்பு என்ற இலக்கை அடைய வேண்டும் என்பதை வலியுறுத்தி பதாகைகளை கையில் ஏந்தி ஊர்வலமாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com