சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி
சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி
Published on

காங்கயம்

காங்கயம் போலீசார் சார்பில் சாலை பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு, நேற்று காலை போலீஸ் நிலைய ரவுண்டானா பகுதியில் இருந்து விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பேரணியை காங்கயம் துணை போலீஸ் சூப்பிரண்டு பார்த்திபன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். மேலும் பொதுமக்களுக்கு சாலை பாதுகாப்பு உறுதிமொழி மற்றும் சாலை பாதுகாப்பு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது. இந்த விழிப்புணர்வு பேரணியில் காங்கயம் போலீஸ் இன்ஸ்பெக்டர் காமராஜ், போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் மகேஸ்வரன் மற்றும் போலீசார், பொதுமக்கள், வாகன ஓட்டிகள் பலர் பங்கேற்றனர். இந்த விழிப்புணர்வு பேரணியானது காங்கயம் கரூர் சாலை, கோவை சாலை, திருப்பூர் சாலை, சென்னிமலை சாலை, பழையகோட்டை சாலை, தாராபுரம் சாலை வழியாக சென்று போலீஸ் நிலைய ரவுண்டானாபகுதியில் நிறைவடைந்தது.

---

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com