ஆயுதபூஜை, தீபாவளி ஸ்பெஷல்: சென்னை - மும்பை இடையே சிறப்பு ரெயில்

இந்த சிறப்பு ரெயிலுக்கான முன்பதிவு செப்டம்பர் 28-ந் தேதி காலை 8 மணிக்கு தொடங்குகிறது.
சென்னை - மும்பை இடையே சிறப்பு ரெயில்
Published on: 

சென்னை,

ஆயுதபூஜை, தீபாவளி பண்டிகையையொட்டி, சென்னை - மும்பை இடையே சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.

இது தொடர்பாக, மத்திய ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

ஆயுதபூஜை, தீபாவளி பண்டிகையையொட்டி, பயணிகளின் தேவையை கருத்தில் கொண்டு சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.

மும்பை சத்ரபதி சிவாஜி ரெயில் நிலையத்தில் இருந்து அக்டோபர் 14, 21, 28, நவம்பர் 4, 11, 18 ஆகிய தேதிகளில் புதன்கிழமை அதிகாலை 12.35 மணிக்கு இயக்கப்படும் சிறப்பு ரெயில் (வண்டி எண் 01015) அதே நாள் இரவு 11.30 மணிக்கு சென்னை கடற்கரை ரெயில் நிலையத்தை வந்தடைகிறது.

மறுமார்க்கத்தில், சென்னை கடற்கரையில் இருந்து அக்டோபர் 15, 22, 29, நவம்பர் 5, 12, 19 ஆகிய தேதிகளில் வியாழக்கிழமை காலை 4 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (01016) மறுநாள் காலை 4.05 மணிக்கு மும்பை சத்ரபதி சிவாஜி ரெயில் நிலையத்தை சென்றடைகிறது. 22 பெட்டிகளை கொண்ட இந்த சிறப்பு ரெயில் தமிழ்நாட்டில் அரக்கோணம், பெரம்பூர் ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.

இந்த சிறப்பு ரெயிலுக்கான முன்பதிவு செப்டம்பர் 28-ந் தேதி (வரும் திங்கட்கிழமை) காலை 8 மணிக்கு தொடங்குகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com