பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகை: கலெக்டர் லட்சுமிபதி தகவல்

தூத்துக்குடி மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் கல்லூரி மாணவ, மாணவிகள் கல்வி உதவித் தொகை பெற நவ.18-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் கோ.லட்சுமிபதி அறிவுறுத்தி உள்ளார்.
பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகை: கலெக்டர் லட்சுமிபதி தகவல்
Published on

தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் கோ.லட்சுமிபதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

அரசு, அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியார் தொழிற் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் பயிலும் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசு பல்வேறு திட்டங்களின் கீழ் கல்வி உதவித் தொகை வழங்கி வருகிறது. அதன்படி அரசு, அரசு உதவி பெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மூன்றாண்டு இளங்கலை பட்டப்படிப்பு படிக்கும் ற்படுத்தப்படுத்தபட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மாணவ, மாணவிகளுக்கு இலவச கல்வி திட்டத்தின் கீழ் எந்தவித நிபந்தனையும் இன்றி கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது. இதே போன்று முதுகலை பட்டப்படிப்பு, ஐ.டி.ஐ, பாலிடெக்னிக், தொழிற்கல்வி மற்றும் ஆராய்ச்சி படிப்பு படிப்பவர்கள் இந்த திட்டத்தின் கீழ் கல்வி உதவித் தொகை பெறுவதற்கு, அவர்களின் பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்து 50 ஆயிரத்துக்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.

நடப்பாண்டில் உதவித் தொகை புதுப்பிக்கும் மாணவ, மாணவிகள், https://ssp.tn.gov.inஎன்ற இணையதள முகவரியில் மாணவர்களின் ஆதார் எண் மூலம் சரிபார்த்துக் கொள்ளலாம். இதில் ஏதாவது இடர்பாடு ஏற்படும் பட்சத்தில் தங்கள் கல்லூரியில் உள்ள உதவித் தொகை உதவியாளரை ஆதார் எண்நகலுடன் அணுக வேண்டும்.

தூத்துக்குடி மாவட்டத்தில் படிக்கும் தகுதி உள்ள பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மாணவ, மாணவிகள் கல்வி உதவித்தொகை புதுப்பித்தலுக்கான விண்ணப்பங்களை 18.11.2023-க்குள் இணையதளத்தில் (https://ssp.tn.gov.in) பதிவு செய்யப்படவேண்டும். மேலும் விவரங்களுக்கு தங்கள் கல்லூரி முதல்வர் அல்லது மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை அணுகலாம்.

இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com