

சென்னை,
தமிழ்நாடு அரசு தலைமை காஜி முஃப்தி உஸ்மான் முஹ்யித்தீன் பாகவி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:
இன்று ஞாயிற்றுக்கிழமை 17.5.2026 மாலை துல்ஹஜ் மாதத்திற்கான பிறை தமிழகத்தில் தென்படாததால் இன்ஷா அல்லாஹ் செவ்வாய் கிழமை 19.5.2026 அன்று துல்ஹஜ் மாத முதல் பிறை என்று இஸ்லாமிய (ஷரீஅத்) முறைப்படி அறிவிக்கப்படுகிறது.
ஈதுல் அழ்ஹா (பக்ரீத்) பெருநாள் 28.5.2026 வியாழக்கிழமை கொண்டாடப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.