பிற மாநிலங்களுக்கு கனிமங்களை கொண்டு செல்வதற்கான தடை மேலும் நீட்டிப்பு

கனிமங்களை எடுத்துச்செல்ல விதிக்கப்பட்ட தடை மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
பிற மாநிலங்களுக்கு கனிமங்களை கொண்டு செல்வதற்கான தடை மேலும் நீட்டிப்பு
Published on: 

சென்னை,

தமிழகத்தில் உள்கட்டமைப்பு, நகரமயமாக்கல் பணிகளுக்கான கருங்கல் மற்றும் ஜல்லிக்கற்கள் போன்ற கட்டுமான பொருட்களின் தடையற்ற வினியோகத்தை உறுதி செய்யவும். செயற்கை விலையேற்றத்தை தடுக்கவும் தமிழ்நாடு சட்ட விரோத கனிமச்சுரங்கம், கனிம போக்குவரத்து மற்றும் சேமிப்பு, தடுப்பு விதிகளில் கடந்த ஜூலை 9-ந்தேதி திருத்தம் செய்யப்பட்டது.

3 மாதங்களுக்கு தடை

இதன் அடிப்படையில், காரைக்கால், புதுச்சேரி தவிர பிற மாநிலங்களுக்கு கருங்கல், ஜல்லிக்கற்களை கொண்டு செல்ல 3 மாதங்களுக்கு தடை விதித்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்தது. இந்த தடை உத்தரவு இன்றுடன் முடிவுக்கு வருகிறது.

காரைக்கால், புதுச்சேரி தவிர

இந்த நிலையில், தமிழகத்தில் இருந்து வெளி மாநிலங்களுக்கு கனிமங்களை எடுத்துச்செல்ல விதிக்கப்பட்ட தடை மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. காரைக்கால், புதுச்சேரி தவிர பிற மாநிலங்களுக்கு கருங்கல், ஜல்லிக்கற்களை கொண்டு செல்ல 3 மாதங்களுக்கு தடை விதித்து புவியியல் மற்றும் சுரங்கத்துறை உத்தரவிட்டுள்ளது. மேலும், கனிமங்கள் கடத்தப்படுவதை தடுக்க அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல் கண்காணிப்பாளர்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com